Temple News | News | Dinamalar Temple | வன்னிமரம் எந்த தெய்வத்திற்கு உரியது?
வன்னி மரத்திற்கு தெய்வீக சக்தி அதிகம் உள்ளதாகச் சொல்லப்படுவது உண்மையா?
வன்னிமரம் ஜெயதேவதையின் வடிவம் என்பார்கள். தற்காலத்தில் அபூர்வமாகிவிட்ட வன்னிமரத்தை சில ஆலயங்களில் காணலாம். இம் மரத்தை வணங்கி வழிபட்டால் வழக்குகளிலும், தேர்வுகளிலும் வெற்றிகளை எளிதாகக் குவிக்கலாம் என்பது உண்மையே! பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின்போது தமது ஆயுதங்களை வன்னிமரப் பொந்து ஒன்றில்தான் மறைத்து வைத்தார்களாம். உமா தேவி, வன்னி மரத்தடியில் வாசம் செய்வதாகவும், தவம் இருந்ததாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. விநாயகப் பெருமானுடைய பஞ்சபூத சொரூபத்தை உணர்த்தும் ஐந்து வகையான மரங்களுள், வன்னிமரம், அக்னி சொரூபம் ஆகும். பொறையாருக்கு அருகிலுள்ள சாத்தனூர் பாசிக்குளம் விநாயகர், சாஸ்தாவுக்கு அக்னி சொரூபராக வன்னி மரவடிவில் காட்சி கொடுத்ததாக ஸ்தல மகாத்மியம் கூறுகிறது. விநாயகருக்கும், சனீஸ்வரனுக்கும் விருப்பத்துக்குரிய வன்னிமர இலையை, வடமொழியில் சமிபத்ரம் என்பார்கள்.
வன்னி மரம்
வம்பார் கொன்றை வன்னி மத்தம் மலர்தூவி
நம்பா வென்ன நல்கும் பெருமான் உறைகோயில்
கொம்பார் குரவு சொகுடி முல்லை குவிந்தெங்கும்
மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே.
- திருஞானசம்பந்தர்.
No comments:
Post a Comment