Friday, 22 July 2016

உயிர்களுக்கு உணவிடும் சூட்சும பரிகாரம்

உயிர்களுக்கு உணவிடும் சூட்சும பரிகாரம்


எந்த அளவிற்கு பிற உயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணுகின்றானோ 

அந்த அளவிற்கு அவனது நிலை உயரும் என்பதை முருகன் அருளால் 

அறியலாம். பல உயிர்கள் வாழ்க வாழ்க என மனதார வாழ்த்தும் போது அந்த

 உயிர்களின் எண்ண அலைகள் உயிர்களை மகிழ்வித்தவனுக்கு சென்று 

மகிழ்வித்தவன் ஆன்மாவை மேன்மேலும் ஆக்கம் பெற செய்கிறது. எல்லா 

உயிர்களும் பஞ்சபூதங்களால் ஆனதே, இயற்கையே பஞ்சபூதமாகும். 

ஆதலினால் பஞ்சபூதத்தினால் ஆன உயிர்களை மகிழ்விக்க மகிழ்விக்க 

பஞ்சபூதமே மனம் மகிழ்ந்து ஆசி கூறுவதால் பஞ்சபூதத்தால் ஆன 

இயற்கையும் நம்மை ஆசீர்வதித்து அருள் செய்கிறது. அந்த இயற்கை 

அருள்கூடி அந்த இயற்கையே நமக்கு கட்டுப்படுகிறது. பஞ்சபூதத்தை 

இவ்விதமே கட்டுப்படுத்திட உலக உயிர்கள்பால் அளவிலாது அளவிலாது 

கரையற்ற கருணை கொண்டு அன்புசெலுத்தி உலக உயிர்களிடத்து ஆசிகளை

 பெற்று இயற்கையை வசப்படுத்தி பஞ்சபூதங்களையும் தம்முள் அடக்கி, 

ஒடுங்கச் செய்து இயற்கையை வென்று வெற்றி கண்டவன் அருள்மிகு 

முருகப்பெருமான்.

கோடான கோடி நன்றிகள்  http://tantricremedies.blogspot.in/

மிருகங்கள், பறவைகள், பூச்சிகள் போன்ற உயிர்களுக்கு உணவிட்டு வருவது நம் அனேக பிரச்சனைகளுக்கு உடனடி பலன் அளிக்க கூடிய பரிகாரமாகும். அன்றாட வாழ்வில் அதன் பயனை உணரலாம். மேலும் உயிர் வதை (அசைவ உணவு) செய்யாமல் இருப்பதும், உணவுக்காக வெட்ட அழைத்து செல்லப்படும் பசுக்களை காப்பாற்றி பசு மடங்களுக்கு விடுதல் சனி,ராகு,குரு, சுக்கிரன் போன்ற கிரகங்களை வலுப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், நீண்ட நாள் பிரச்சனைகள் பலவற்றுக்கு திடீர் தீர்வு தேடித்தரும். மிக சக்தி வாய்ந்த பரிகாரம் ஒன்று-பசு வதையை தடுப்பது.இங்கே எந்த எந்த நாளில் எந்த உயிர்களுக்கு உணவிட்டு பலன் தேடி கொள்ளலாம் என்பது கொடுக்கப்பட்டுள்ளது-ஜாதகம் இல்லாதவர்கள் ஏழு நாட்களும் தன்னால் முடிந்த அளவு உணவிட்டு பலன் அடையலாம்.

நாட்கள் - கிரகம் - உணவு
ஞாயிறு - சூரியன் - சப்பாத்தி மற்றும் ஊர வைத்த கோதுமை பசுக்களுக்கு கொடுக்கலாம். வெல்லம் குரங்குகளுக்கு கொடுக்கலாம்.
திங்கள் - சந்திரன் - கோதுமை மாவை சீறிய உருண்டைகள் செய்து மீன்களுக்கு உணவிடலாம். (வீட்டில் உள்ள மீன் தொட்டி மீன்களுக்கல்ல). பசுவிற்க்கு நீர் வைப்பது.
செவ்வாய் - செவ்வாய்- ஊர வைத்த கடலை பருப்பு மற்றும் வெல்லம்- குரங்குகளுக்கு, இனிப்பு பொடி - எறும்புகளுக்கு
புதன் - புதன் - பச்சை புற்கள் - அகத்தி கீரை பசுக்களுக்கு அல்லது குதிரைவாளி (உணவு பொருள்-நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) புறாக்களுக்கு.
வியாழன் - குரு - ஊர வைத்த கொண்டை கடலை - குதிரை மற்றும் பசுக்களுக்கு- சோளம் புறாக்களுக்கு
வெள்ளி - சுக்கிரன் - பூனைகளுக்கு பால் - பசுக்களுக்கு புற்கள் அல்லது அகத்தி கீரை.
சனி - சனி - கருப்பு நாய்கள் மற்றும் கருப்பு பசுக்களுக்கு நல்லெண்ணையில் சுட்ட சப்பாத்தி அல்லது வேறு உணவுகள்.
புதன் அல்லது சனி - ராகு - எருமைகளுக்கு தீனி வைத்தல் மற்றும் யானைகளுக்கு இலை தழை ஏதேனும்.
கேது- நாய் வளர்க்கலாம், அல்லது முயல், பசு எது முடிகிறதோ அது. ஆனால் அவைகளை துன்புறுத்தாமல் தினசரி உணவிட்டு பராமரிக்க வேண்டும். லக்னத்தில், அஷ்டமத்தில் கேது, கேது திசை நடப்பவர்கள் இவற்றை செய்து பலன் அடையலாம்.
பொதுவாகவே தினசரி நாய்களுக்கு ஒரு மூன்று ரூபாய் பிஸ்கட் பாக்கெட் ஆவது வாங்கி போட்டு வருவது நலம். மேலும் உங்கள் குழந்தைகளுக்கும் நாய்,பூனை சிறு உயிரினங்கள்,எறும்பு போன்றவற்றை துன்புறுத்தாமல் இருக்க கற்று கொடுத்து, கர்ம வினைகளில் இருந்து அவர்களை காப்பாற்றி வாருங்கள்.
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பவதுவே 
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே !



ஒவ்வொரு எறும்பும் தனக்கு உணவு 

இட்டவர்களுக்கு ஒரு நிமிடம் தவம் செய்கிறது.

 குறிப்பாக கோயில், கோயிலைச் சுற்றி உள்ள

 இடங்களில் வாழ்கின்ற எறும்புகள் 

கோயிலுக்கு வருகின்ற பக்தர்களை நம்பியே

 வாழ்கின்றன. எனவே, ஒவ்வொருவரும் 

தினந்தோறும் கோயிலுக்கு செல்லும் போது 

சிறிதளவு ரவை,கோதுமை/அரிசி 

குருணையுடன் நாட்டுச் சர்க்கரை கலந்து 

அங்குள்ள எறும்புகளுக்கு உணவிட வேண்டும்.

அன்றைய பொழுதிற்கு உணவு கிடைக்கப் 

பெற்ற எறும்புகள் மனநிறைவுடன் நமக்காக

 ஒரு நிமிடம் தவம் செய்து அந்த தவப் பலனை

 நமக்கு அளிக்கின்றன. அதனால் நம் 

குடும்பத்தில் என்றுமே உணவிற்கு பஞ்சம்

 ஏற்படாது. ஒற்றுமை அதிகரித்து அமைதி 

நிலவும்.


ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த தானியம் 

உண்டு. குறிப்பிட்ட தெய்வத்தின் அருளைப்

 பெற அதற்க்குரித்தான தானிய ரவைகளையே 

கோயில் எறும்புகளுக்கு உணவாக இட 

வேண்டும்.

அன்னபூரணி – அரிசி


முருகன் – கேழ்வரகு

பிரகஸ்பதி – கோதுமை

சந்திரன் – உளுந்து

சூரியன் – கடலைப் பருப்பு

ராகு – கம்பு

புதன் – சோளம்

செவ்வாய் – துவரை

குரு – கடலை

சனி – எள்   



No comments:

Post a Comment