Tuesday, 26 July 2016

கோழியை விரும்பிச் சாப்பிடுபவர்களின் கதி என்ன?

http://omeswara.blogspot.in/2013/07/blog-post_16.html

*

http://omeswara.blogspot.in/2013/05/blog-post_7.html 


நாம் பெற்ற தேகம் எப்படியும் கண்டிப்பாக ஒருநாள் அழியத்தான் போகிறது. அப்படி அழியப்போகின்ற இந்த உடலை வளர்ப்பதற்கு தாவர உணவை தவிர்த்து பாதகமான ஒரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை புசித்தாலும் காப்பாற்ற முடியாது. ஆகவே நிலையில்லாத தேகத்திற்காக மாமிச உணவை உண்டு அழியாத ஆன்மாவிற்கு பாவச்சுமையை ஏற்றி நரகத்தில் வீழ்த்துவது எந்தவிதத்தில் நியாயம்?
ஆகவே ஆன்மீக நாட்டம் உள்ள அன்பர்கள் இதுவரை இக்கருத்தை உணராமல் புசித்திருந்தாலும் இனியேனும் இதைப் புரிந்துகொண்டு கொடுமையான மாமிச உண்ணும் பழக்கத்திலிருந்து விடுபடுங்கள்.

-ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகர்.
 
 நாம் எவ்வளவுதான் தானம்,தருமம் செய்தாலும் அசைவ உணவுகளை விடாதவரை நாம் ஆண்டவன் அருளை முழுமையாக பெற முடியாது. எப்படி ஒரு உயிர் உணவுக்காக கொல்லப்படும்போது துடிக்கிறதோ அவையனைத்தும் அதை சாப்பிடுபவரை நிச்சயம் பாதிக்காமல் விடவேவிடாது.எதிர்பாரத விதமாக நமக்கு உடலில் ஒரு காயமோ,கீறலோ ஏற்பட்டால் எப்படி துடிக்கிறோம் அதை விட பல ஆயிரம் மடங்கு கொடுமையான அவஸ்தையை கொல்லப்படும் உயிர் அனுபவிக்கிறது.அதனுடைய உயிர் பலவந்தமாக பறிக்கபடும் போது ஏற்படும் அதிர்வு,அந்த உயிரின் அவஸ்தை,அது கொடுக்கும் சாபங்கள் அந்த உடலை உண்பவரையும்,கொண்றவரையும் விடாது.
அதோடு மட்டுமில்லாமல் எதிர்வரும் சந்ததிக்கு பெரும் தீமைகளை விளைவிக்கிறது.
எத்தனை உயிர்களை புசித்தீர்களோ அத்தனை பிறவிகள் கட்டாயம் பிறந்தாக வேண்டும்.அதோடு எந்த அங்கங்களை ருசித்து சாப்பிடுகிறோமோ அதே அங்கத்தில் உங்களுக்கோ அல்லது உங்கள் வாரிசுகளுக்கோ கட்டாயம் பாதிப்புண்டாகும்.
அதனால் விட்டுவிடுங்கள் அசைவ உணவுகளை. இதையே பல சித்தர்களும்,ஞானிகளும் தங்கள்பாடலில்பாடியுள்ளனர்.
அவை::-

"பிறந்தன பிறந்தன பிறவிக டோறும்
கொன்றனை யனைத்து மனைத்துநினைக் கொன்றன
தின்றனை யனைத்து மனைத்துநினைத் தின்றன
பெற்றன யனைத்து மனைத்துநினைப் பெற்றன".
:-பட்டிணத்தார்.

"பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்தன் தூதூவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே".

"பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்
உற்றுஆரும் ஆவி அமர்ந்துஇடம் உச்சியே".
:-திருமூலர் திருமந்திரம்.

உயிர் கொலை,புலால் உண்பது மேலும் தெரிந்தே செய்யபடும் பாவஙகளுக்கு எவ்வித பரிகாரங்கள் கிடையாது.
ஜீவகாருண்யத்துடன் வாழமுடியுமென வள்ளலார்,ரமணர்.வாரியார் இன்னும் பல சான்றோர்கள் நமக்கு வாழ்ந்து காட்டியுள்ளனர்.
அன்பர்கள் இதனை உணர்ந்து நீங்களும் நலமுடன் வாழுங்கள் ஏனைய உயிரினங்களையும் வாழவிடுங்கள்.
 
 




No comments:

Post a Comment