கண் திருஷ்டிக்குப் பரிகாரம் என்ன?

கண் திருஷ்டியைக் களைவது எப்படி?
http://www.kulaluravuthiagi.com/drushti.html
தம்பதிகள் மேல் படியும் திருஷ்டி தோஷங்கள்
http://kulaluravuthiagi.com/drushti.html
சஹஸ்ர தீப தரிசனம்
ஸ்ரீ -ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம்
கோடான கோடி நன்றிகள்
Sri-la-Sri Lobhamatha Agasthiar Ashram, Thiruannamalai.அகிலமெங்கும் ஆன்மீகம் பரப்பிட அருணாசல இறை வலையங்கள் (ARUNACHALA CELESTIAL NETS)
http://www.agasthiar.org/
http://kulaluravuthiagi.com/
திருச்சிற்றம்பலம்
*'திருஷ்டி' எனில், மற்றவர்கள் நம்மைப் பார்ப்பதால் நமது உடலிலும் உள்ளத்திலும் ஏற்படக்கூடிய சில மாறுதல்களைக் குறிப்பது. இவற்றைப்போக்கி நாம் மீண்டும் பழையபடி வலிமை பெறவும், அவை நம்மைத்தாக்காமல் இருக்கவும் பல வழிமுறைகள் நமது முன்னோர்களால் காலம்தொட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒன்றுதான் ஆரத்தி எடுப்பது.
இவற்றிலும் பல வகைகள் உள்ளன. ஆனால், அதில் அடிப்படையானது சிவத்தைக் குறிக்கும் சுண்ணாம்பையும், பெண்களின் மங்கலச் சின்னமான மஞ்சளையும் இணைப்பதே. சுண்ணாம்பு சைவமாகிய தூய்மையின் சின்னம். ஸத்வ குணம் உடையதாகவும், கிருமிநாசினியாகவும் செயல்படக்கூடிய ஆற்றல் உடையது.
மஞ்சள், பெண்மையின் மங்களத்தின் சின்னம். நமக்குத் தீமைகள் விலக்கப்பெற்று தூய்மை அடையவும், அதுமட்டுமில்லாமல் அனைத்துவிதமான மங்களங்கள் உண்டாகவும், சுண்ணாம்பும் மஞ்சளும் கலக்கப்பட்டு சிகப்பு நிறம் ஏற்பட்டு, இதனால் உக்ரமான பார்வையால் பார்க்கப்பட்ட நோக்கு மாறிவிடும். சிகப்பு நிறம் எப்பேர்ப்பட்ட ஆபத்துகளையும் விலக்கக்கூடிய சக்தி படைத்தது.
திரிசக்தி ஆன்மீக இதழில் படித்தது.
http://tamilnanbargal.com/tamil-articles/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88
*
http://tamil.webdunia.com/religion/astrology/remedy/1008/31/1100831032_1.htm
*
http://aanmikam.blogspot.in/2012/09/blog-post_12.html
*
http://www.tamilcnn.org/archives/47568.html
கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பதுதான் அதனுடைய அர்த்தம். ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான். அந்தத் தெருவிலேயே பெரிய வீடு கட்டிவிட்டார்கள். அதனால் அந்தத் தெருக்காரர்கள் எல்லாம் போகும் போதெல்லாம் திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டுப் போவார்கள்.
அப்பொழுது என்ன செய்ய வேண்டுமென்றால், அவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டும். இதுதான் முக்கியம்.
சிலரெல்லாம் வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைப்பார்கள். பார்ப்பவர்களுக்கு அதிலேயே அவர்களுடைய சிந்தனை போய்விடும். அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராமல் போய்விடும்.
இதுபோன்ற எளிமையான சில பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது. இதில் குறிப்பாக தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா முட்கள் உள்ள செடி. அதுபோன்று முள் செடிகள் இருக்கும் படியும் வைக்கலாம். இந்த மாதிரி எளிய பரிகாரங்கள் நிறைய இருக்கிறது.
சிலரெல்லாம் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். சிலர், நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள். சிலர் பிள்ளையாரை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள்.
இதுபோன்று சிலவற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும். சாதாரணமாகப் பார்த்தீர்களென்றால் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கண் திருஷ்டிக்கு நல்ல பாதுகாப்பாக இருப்பார். சிலரெல்லாம் எல்லைத் தெய்வங்களோட படம், ஆயுதங்களோடு இருக்கக்கூடிய படத்தை வைத்திருப்பார்கள்.
ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.
வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்பப்பவே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது.
http://www.vempady.com/?p=1002
*
திருஷ்டி சுத்தி போடுவது எப்படி?
திருஷ்டி என்பது சம்ஸ்கிருத சொல். தமிழில் கண். திருஷ்டி கழித்தலை தமிழர்கள் கண்ணேறு கழித்தல் என்று கூறுவார்கள்.
குழந்தை திருஷ்டி;
பிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான். அழகோ அழகுன்னு எல்லாரும் கொஞ்சறப்போ ஏற்படுற திருஷ்டிக்கு பரிகாரம் தான் கருப்பு திருஷ்டி பொட்டு. எளிமையான இது எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்று.நெற்றியிலும் கன்னத்திலும் இடப்படும் மைப்பொட்டு குழந்தையின் திருஷ்டியை போக்கும். கோயில்கள்ல தருகின்ற ஹோம ரட்சையை வைத்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை!.
வாலிப திருஷ்டி;
ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நல்லா மூடிகிட்டு இளைஞனையோ/வாலிப பெண்ணையோ கிழக்கு நோக்கி இருத்தி இடமிருந்து வலமா மூணுதடவையும் வலமிருந்து இடமா மூணு தடவையும்சுத்தி அப்படியே சுத்தி அந்த உப்பை தண்ணியில போட்டுடுங்க. தண்ணியில உப்பு கரையரா மாதிரி திருஷ்டி எல்லாம் கரைஞ்சி போய்விடும்.
பெரியவங்களுக்கு;
புதிய சட்டி ஒன்று, ஊமத்தங்காய், படிகாரம் தெருமண் , இவைகளை சேகரித்துக் கொண்டு பெரியவர்களை தெருவாசலில்கிழக்கு முகமாக நிறுத்தி மண்சட்டிக்குள் ஊமத்தங்காய், படிகாரம், தெருமண் இவை மூன்றையும் போட்டு மண்சட்டியை தலைக்கு இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் மூன்று முறை சுற்றி தலை முதல் பாதம் வரை இறக்கி அப்படியே எடுத்துச் சென்று முச்சந்திகள் கூடும் இடத்தில் போட்டு உடையுங்கள். கையோடு ஒரு துடைப்பம் எடுத்துச் சென்று ஓரமாக பெருக்கித் தள்ளுங்கள். இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் போகும். பின்னர் வீடு திரும்பி கைகால் கழுவி தலையில் சிறிது தண்ணீர் தெளித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையவும் . பிள்ளையையும் அவ்வாறே செய்ய செய்து உள்ளே அழைத்துச் செல்லவும்.
சில திருஷ்டி பரிகாரங்கள் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு செய்யமுடியாது அவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
கடுகுமிளகாய், உப்பு சிறிது தெருமண், தலைமுடி இவற்றினை கையில் எடுத்துக் கொண்டு குழந்தையை உட்காரவைத்து ஊருகண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக் கண்ணு, நோய்கண்ணு, நொள்ள கண்ணு கண்டக்கண்ணு, கள்ளக் கண்ணு, அந்த கண்ணு, இந்த கண்ணு எல்லாம் கண்ணும் கண்டபடி தொலையட்டும் கடுகு போல வெடிக்கட்டும் என்று இடமிருந்துவலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுற்றி போடுவார்கள்.இதுவும் ஒரு எளிமையான திருஷ்டி பரிகாரமே!
இந்த திருஷ்டி பரிகாரங்கள் நம்முடைய முன்னோர்கள் தொன்றுதொட்டு கடைபிடித்து வந்தவை ஆகும்.இதை கடைபிடிப்பது அவரவர் விருப்பம் ஆகும்.

திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment