பணம் சேர ?
விதைத்தாத்தான் அறுவடை பண்ண முடியும்
. இதுதான் பிரபஞ்ச தத்துவம் ! நம் சம்பாத்தியத்தில்
கண்டிப்பாக குறைந்தது நூற்றுக்கு, ஐந்நு பங்காவது
தானம் செய்ய வேண்டும் ! நீங்கள் எதை
விதைக்கின்றீர்களோ அதை கட்டாயம் நூறு மடங்கு
அறுவடை செய்ய முடியும் ! வருமானம் எவ்வளவு
வந்தாலும் தானே அனுபவித்து வந்தால் ?
அப்படியேதான் நம் வாழ்க்கை ஓடும் ! முனனேற்றம்
இருக்காது! விதையுங்கள் பணத்தை தானமாக
உங்கள் வருமானத்தில் ஐந்து பங்காவது?
அறுவடையாகும் நூறு பங்காக!! இது உண்மை!!
786
உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக
நம் பெரியோர்கள் எப்போதும் வீட்டில் சிரிப்பும் ஆனந்தமும் பெருக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள். குழந்தைகள் விளையாடும் சந்தோஷ ஒலி, பறவைகள் எழுப்பும் இனிய கீதங்கள், வீணை, மிருதங்கம் போன்ற வாத்தியங்களின் இனிய இசை நம் இல்லங்களில் நிறைந்திருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். வீட்டில் அழுகை ஒலி இருந்தால் லட்சுமி கடாட்சம் இருக்காது. மாலை சந்தியா வேளையில் டீவியில் அழுகுரல் கேட்கும் நாடகங்களைப் பார்ப்பதால் லட்சுமி கடாட்சம் மங்கிப் போய் தரித்திர நிலையே உருவாகும் என்தை இனியேனும் உணர்ந்து கொள்ளுங்கள்.
இறைவழிபாடும்,இறை மந்திர ஜபமும்,பவுர்ணமி பூஜை வழிபாடு,திரு அண்ணாமலை வழிபாடு,கிரிவலம்,அன்னதானம்,கண் தானம், ரத்த தானம்,ஆடை தானம்,விஷய தானம்,ருத்ராட்ச தானம், இறைவனைப் பாடுதல்,சாளக்கிராம தானம், ஆன்மீகப்பிரசங்கம், மரம் நடுதல்,பசு மடம் அமைத்து வயதான பசுக்களை பராமரித்தல்,பசுவிற்கு அகத்திக்கீரை வழங்குதல், கோயில் கும்பாபிஷேகத்தில் உடல் உழைப்பு வழங்குதல்,தண்ணீர்பந்தல் அமைத்தல்,பிறருக்கு மந்திர ஜபம் உபதேசித்தல்,குலதெய்வத்திற்கு ஏராளமான வழிபாட்டு முறைகளைச் செய்தல்,அனாதைகள்,ஆதரவற்ற விதவை,முதியோர்களைப் பராமரித்தல்,ஏழைப்பெண்ணிற்கு திருமணம் செய்வித்தல்,குறிப்பிட்ட அமாவாசை அல்லது பவுர்ணமி அல்லது நட்சத்திர நாளன்று காசியில் உள்ள கங்கையில் நீராடுதல்,மற்றும் கோதாவரி,தாமிரபரணி,காவிரி,வைகையில் நீராடுதல்,சித்தர்கள் வழிபாடு செய்தல்,பசுதானம் செய்தல்,திரு அண்ணாமலையில் அன்னதானம் செய்தல்,சதுரகிரிக்கு குறிப்பிட்ட அமாவாசைகள் வரை சென்று சிவனை வழிபடுதல்,விநாயகர் கோவில் அமைத்தல், மகாலட்சுமி மற்றும் குபேர பூஜைகளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் செய்தல்,சத்திய நாராயண பூஜை செய்தல்,பவுர்ணமி பூஜையை அம்பாள் கோவிலில் நடத்துதல்,அம்பாள் சன்னதியில் பவுர்ணமி பூஜை தினத்தன்று இரவில் காயத்ரி மந்திரம் ஜபித்தல்,பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் கடலில் இடுப்பளவு நின்று சூரியன் அல்லது சந்திரனைப்பார்த்து 9ன் மடங்குகளில் சில குறிப்பிட்ட மந்திரங்களை ஜபித்தல் . . . என ஏராளமான வழிபாட்டுப் பரிகாரங்களை சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் தொடர்ந்து செய்ய வேண்டிவரும்.அப்படிச் செய்தால்,நாமும் நமக்கு முந்தைய மூன்று தலைமுறை வரையிலும் பாவங்கள் தீர்ந்து நிம்மதியாக வாழமுடியும்.வசதி வாய்ப்புக்கள் நம்மை தேடிவரும்.
No comments:
Post a Comment