சைவ உணவு உண்பதன் மகத்துவம்
புலால் உணவால் வரும் கேடுகள்
மனித வர்க்கதிற்கு பல்வேறு வகையான தானியங்களும், காய்கறிகளும், கிழங்கு வகைகளும், கனி வகைகளும், கீரை வகைகளும் இன்னும் பலவிதமான தாவர உணவுகளையும் மனித சமுதாயம் உயிர் வாழ இயற்கை தாய் தனது பெருங்கருணையினால் படைத்திருக்கிறார். இப்படிப்பட்ட இயற்கையின் கொடையாகிய தாவர உணவை விடுத்து ஆடு, கோழி, மீன் போன்ற மிருகாதி உணவுகளை சுவைக்காக அவைகளின் உயிரைக் கொன்று சாப்பிடக்கூடாது. உயிருள்ள மிருகங்களும், பறவைகளும், நீர்வாழ் உயிரினங்களும் கொல்லும்போது தம்மைக் காத்துக் கொள்ள பேசக்கூட தெரியாத வகையில் உள்ளது என்ற காரணத்தால் அவைகளைக் கொல்வது இயற்கைக்கு ஒவ்வாத செயலாகும்.
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?
-திருக்குறள்- புலால் மறுத்தல்
தன் உடம்பை பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும். (நன்றி- மு. வரதராசனார்)
நாம் பெற்ற தேகம் எப்படியும் கண்டிப்பாக ஒருநாள் அழியத்தான் போகிறது. அப்படி அழியப்போகின்ற இந்த உடலை வளர்ப்பதற்கு தாவர உணவை தவிர்த்து பாதகமான ஒரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை புசித்தாலும் காப்பாற்ற முடியாது. ஆகவே நிலையில்லாத தேகத்திற்காக மாமிச உணவை உண்டு அழியாத ஆன்மாவிற்கு பாவச்சுமையை ஏற்றி நரகத்தில் வீழ்த்துவது எந்தவிதத்தில் நியாயம்?
ஆகவே ஆன்மீக நாட்டம் உள்ள அன்பர்கள் இதுவரை இக்கருத்தை உணராமல் புசித்திருந்தாலும் இனியேனும் இதைப் புரிந்துகொண்டு கொடுமையான மாமிச உண்ணும் பழக்கத்திலிருந்து விடுபடுங்கள்.
-ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகர்.
*
சைவ உணவில் குறைவான கொழுப்புச்சத்து இருப்பதால் மாரடைப்பு உள்ளவர்கள் எக்கவலையுமின்றி இந்த உணவை உண்ணலாம் என்றும் அவர்களுக்குத் தெரியாது.அதிக மாமிசம் உண்பவர்களுக்குக் குடல் வால்நோய் ஏற்படும் என்றும் அசைவ உணவில் நைட்ரஜன் உள்ளதால் சிறுநீரகத்திற்கு அதிக வேலை ஏற்படுகிறது என்றும் நைட்ரஜன் அதிகமானால் ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்து மூட்டுக்களில் படிந்துவிடும் என்றும் அதனால் இவர்களுக்கு மூட்டுவலி ஏற்படுகிறது என்றும் நவீன மருத்துவம் கண்டறிந்துள்ளது.தவிர இதனால் குடலில் சில வகையான குடல்புழுக்கள் உண்டாகின்றன.மனித உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதம் சைவ உணவில் முழுமையாகக் கிடைக்கிறது.மனதைச் செம்மைப்படுத்த சைவ உணவு தேவை.மேலும் அசைவம் தொடர்ந்து சாப்பிடும்போது சாப்பிடுபவர் மிருக உணர்ச்சியடைகிறார்.அவர்களது உடலில் துர்நாற்றம் உண்டாகிறது.
எப்பொழுதுமே நமது முன்னோர்கள் மாமிசத்தை உணவாகக் கொள்வதை வரவேற்கவே இல்லை ,,,
நம் தாய்திருநாட்டில் தோன்றியி 63 நாயன்மார்களும், ஆழ்வார்களும்
அதை கடுமையாக எதிர்த்திருக்கிறார்க்ள்,
எடுத்துக்காட்டாக,
திருமந்திரத்தில்.
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன் தன் துதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே
என்னும் திருமூலரின் திருவாக்கை நினைவு கொள்ள வேண்டும் , மேலும் வள்ளுவப் பெருந்தகை ,
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று
என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்...
*
http://www.maharishipathanjali.com/2010/05/blog-post.html
*
http://uravukaaran.blogspot.com/2010/09/blog-post_15.html
*
http://jeeno.blogspot.com/2007/01/blog-post.html
*
http://suddhasanmargham.blogspot.com/2010/07/blog-post_25.html
*
http://kobikashok.blogspot.com/2010/10/blog-post_5224.html
*
http://www.maharishipathanjali.com/search/label/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%20%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%20%20%3F
*
http://www.agathiar.org/mp3/2002/01January/03-01-2002%20T%2057%20min.mp3
*
http://naturalfoodworld.wordpress.com/2010/05/29/nodoctor/
*
http://www.aanmegam.com/vegetables.htm
*
http://www.aanmigakkadal.com/2012/01/blog-post_4185.html
*
http://www.4shared.com/mp3/6QwNMkmA/Are_you_non-vegetarian.html
*
http://www.alaikal.com/news/?p=9268
*
http://news.amanushyam.in/2012/12/blog-post_848.html
*
http://www.vikatan.com/sakthivikatan/Doctor-Vikatan/9614-healthy-is-the-wisdom-by.html
*
http://vmsivakumar.blogspot.in/2010/04/blog-post.html
*
இது மேல்நாட்டினரின் ஒரு வளைத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பதிவு செய்திருக்கிறேன். ''ஸ்டாப் ஈட்டிங் அனிமல்ஸ்'' என்று தெருத் தெருவாக போர்டுகளை மாட்டி, பரப்பி வருகிறார்கள். பனியனில் வாசகமாகப் போட்டு ஆண்களும், பெண்களும் அணிந்து கொண்டு வலம் வருகிறார்கள். கொல்லாமையை வலியுறுத்திய வள்ளுவரும், ஜீவகாருண்யத்தை வலியுறுத்திய வள்ளலாரும், திருமூலரும், புத்தரும், காந்தியும் இன்னும் எவ்வளவோ பெரிய மகான்களும், ஞானிகளும், அறிஞர்களும் பிறந்த பூமியில் இது கேள்விக்குறியே.
நம் புத்திக்கு மந்தத் தன்மையையும், தமோ குணத்தையும் தரும் பிணங்களை அதாவது ஆடு, மாடு, கோழி, மீன், முட்டை போன்றவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் அவை விஷமாகும். ஒரு மனிதன் இறந்தால் விரைவில் புதைக்கவோ, எரிக்கவோ செய்வது எதானால் என்றால் அது விஷக்கிருமிகளை உற்பத்தி செய்யும். அதனால்தான். இறந்தவர்கள் வீட்டுக்கு போய் வந்தவுடன் குளிக்கச் சொல்வது அதனால்தான். இது மனிதனுக்கு மட்டுமல்ல எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும்.
உதாரணமாக ஒரு ஆள் காலையில் எட்டுமணிக்கு ஒரு விபத்தில் செத்து விட்டான் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பிணத்தை அங்கேயே போட்டு விட்டு மறுநாள் வந்து பார்த்தால் என்னவாயிருக்கும் ? முழுவதும் கெட்டு, புழுத்து, அதைப் புழு அரித்து, நீல நிறத்தில் ஒரு நீர் ஒழுகி, துர்நாற்றமடித்துக் கொண்டிருக்கும். அது அப்படி ஆகக் காரணம் என்னவென்றால், அதில் உயிர் இல்லாததே ஆகும். உயிர் இல்லாததால் இரத்தம் இல்லாமல் போனதால் ஆகும். இரத்தம் எதுவாக இருந்தது என்றால் ஜீவனுடைய சக்தியாக இருந்தது. அந்த சக்தியே மனமாக இருந்தது. அந்த சக்தி உடலெங்கும் வியாபித்தக் கொண்டிருந்தது. அந்த இரத்தம் பல விதத்திலும் குறைந்து குறைந்து வரும் போது நீர் அதிகமாகி உடலுக்கு சக்தி இல்லாமல் போகிறது. நல்ல இரத்தபுஷ்டி உள்ள ஆள் இறந்து விட்டால், கொஞ்ச நேரம் கழித்து அவன் உடலை அறுத்துப் பார்த்தால் இரத்தம் காணாமல் போயிருக்கும்.
ஒவ்வொரு உயிரினுடைய உற்பத்தியும் விஷத்தோடு கூடியதாகும். இரண்டு பொருள்கள் இல்லாமல் யாதொரு சிருஷ்டியமில்லை. அந்த இரண்டு என்னவென்றால் சத்தும், அசத்தும். சத்து என்பது அமிர்தம். அசத்து என்பது விஷம். அதாவது அமிர்தம் தோன்றும் போதே விஷமும் தோன்றிவிடும். எப்போது உயிர் நீங்குகிறதோ அப்போது சத்து நீங்கிவிடும். ஆனால் விஷமானது நீங்காமல் உடலில் தங்கி அதை அழிக்கத் தொடங்குகிறது. இந்த சத்தும் அசத்தும் சேர்ந்துதான் இரத்தமாக இருந்தது. ஆனால் உயிரோடு சத்து நீங்கிவிடுகிறது. எனவேதான் உயிரில்லாத பிணங்களைச் சாப்பிடக் கூடாது என்கிறார்கள். செத்ததை சாப்பிட மாட்டோம். கொன்று தின்போம் என்பார்கள். கொன்றால் அது சாகும். செத்தால் அது பிணம்தான். பிணத்திலாவது அசத்து மட்டுமே இருக்கும், முட்டையில் சத்து குறைவாகவும், அசத்து அதிகமாகவும் உள்ள கருவாகும். அதையும் தின்கிறார்கள். அது மிகவும் கெடுதலாகும். விஷம் அதிகமுள்ள முட்டையைத் தின்பதால் வயிறு ஸ்தம்பித்தும், கெட்டியாவதும், நீர், கபம் முதலியன அதிகமாவதுடன் தேவையில்லாத சதைகள் வளரவும் ஏதுவாகிறது. இதனால் பல வியாதிகள் வரும் என்று சொல்லப்படுகிறது. இப்படியாக மாமிசம், முட்டை, மீன் போன்றவற்றை தின்று மக்கள் பல வியாதிகளுக்கு ஆளாவதுடன். கொலைக்கு காரணமாயிருப்பதோடு, ஜீவகாருண்யமில்லாமலும், தயை இல்லாமலும், கடின சித்தம் உள்ளவர்களாகவும், சுயநலம் உள்ளவர் களாகவும், பிணம் தின்றிகளாகவும், ஜீவனாகிய ஆன்மாவுக்கு விரோதமான செயல்களைச் செய்பவர்களாகவும் இருந்து, இறந்து, பாவக் குழியில் வீழ்கிறார்கள்.
*
http://kadavul4u.blogspot.in/2011/05/drinks-vs.html?utm_source=BP_recent
No comments:
Post a Comment